உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரிநாளை நுாற்றாண்டு விழா முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பு

எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரிநாளை நுாற்றாண்டு விழா முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பு

சாத்துார்: சாத்துாரில் நாளை நடக்க உள்ள எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியின் நுாற்றாண்டு விழாவில் முன்னாள் இந்திய துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு பங்கேற்று பேசுகிறார்.சாத்துார் எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லுாரி 1924ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஆண்டு இக்கல்லுாரி நுாறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் இக்கல்லுாரி நாக் கமிட்டியின் ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம் பெற்றுள்ளது. இக்கல்லுாரி வளாகத்தில் நாளை(ஜன. 24) காலை 10:00 மணிக்கு நுாற்றாண்டு பொன் விழா நடக்கிறது.இதில் பங்கேற்க முன்னாள் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு தலைமை வகிக்கிறார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.கல்லுாரி செயலாளர் ஜெகதீசன் வரவேற்கிறார். முதல்வர் கணேஷ் ராம் ஆண்டறிக்கை வாசிக்கிறார். கல்லுாரி தலைவர் பெருமாள் சாமி நன்றி கூறுகிறார். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், முக்கியபிரமுகர்கள் தொழிலதிபர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை