உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரிசர்வேஷன் செய்ய வருவோருக்கு கட்டணமில்லா பார்க்கிங்

 ரிசர்வேஷன் செய்ய வருவோருக்கு கட்டணமில்லா பார்க்கிங்

ஸ்ரீவில்லிபுத்துார்: ரயில்வே ஸ்டேஷன்களில் ரிசர்வேஷன் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு பார்க்கிங் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நாடு முழுவதும் ரயில் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே ஸ்டேஷனுக்கு டூவீலர்களில் மிகவும் அதிகளவில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யவோ, ரயில்களில் வருபவர்களை அழைத்துச் செல்லவோ, ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களை இறக்கி விடவோ வருகின்றனர். இவர்களின் டூவீலர்களை முதல் 6 நிமிடங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது. ஆனால் அதனைவிட கூடுதலாக நேரமாகும்போது, ஸ்டேஷன்களின் தரத்தை பொறுத்து ரூ 10 முதல் 15 வரை கட்டணமாக வசூலிக்கப்படு கிறது. இதில் பயணிகளை இறக்கி விடவோ அல்லது ஏற்றிச் செல்லவோ டூவீலரில் வருபவர்கள் சரியான நேரத்தில் வந்து செல்ல முடியும். ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்ய வரும்போது, ஒவ்வொரு ஸ்டேஷன்களில் பயணிகளின் எண்ணிக்கை பொறுத்து 6 நிமிடங்களையும் கடந்து 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ரயில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் வாகன காப்பக குத்தகைதாரர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே பல நகரங்களில் வாக்குவாதங்கள், தகராறுகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ரிசர்வேஷன் டிக்கெட்டில் நேரத்தை பார்த்து அதையொட்டி வாகனத்தை திரும்ப எடுக்கும் பயணிகளுக்கு கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ