| ADDED : பிப் 06, 2024 12:08 AM
சிவகாசி : சிவகாசி அருகே ஆனைக்குட்டம் இலங்கை அகதிகளுக்கான 117 குடியிருப்புகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்.சிவகாசி அருகே ஆனைக்குட்டம் இலங்கை அகதிகள் முகாமில் ரூபாய் 5.88 கோடு மதிப்பில் 117 குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தது. இதன் திறப்பு விழாவில்கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா முன்னிலை வகித்தனர்.அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திறந்து வைத்து குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அயலக தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை துணை இயக்குனர் ரமேஷ், திட்ட இயக்குனர் தண்டபாணி, விருதுநகர் நகர் தலைவர் மாதவன், சிவகாசி ஒன்றியகுழு தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன் ராஜ், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.