உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் ஐயப்ப பக்தர்களால் அதிகரித்த பால்கோவா விற்பனை

ஸ்ரீவி.,யில் ஐயப்ப பக்தர்களால் அதிகரித்த பால்கோவா விற்பனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐயப்ப பக்தர்கள் வருகையினால் பால்கோவா விற்பனை அதிகரித்துள்ளதால் கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்றாலே உலகளவில் பிரசித்த பெற்ற இனிப்பாகும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சில கடைகளில் மட்டுமே பால்கோவா விற்பனை இருந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரதவீதியில் பால்கோவா விற்பனை கடைகளை அதிகளவில் உள்ளது. மார்கழி மாதம் என்பதால் தினமும் ஏராளமான வெளியூர் மக்களும், சபரிமலை சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் பால்கோவா வாங்கி செல்கின்றனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பால்கோவா கம்பெனிகளில் பத்து மடங்கு பால்கோவா உற்பத்தி அதிகரிக்கப்பட்டு விற்பனை நடந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பல ஆயிரம் பக்தர்களால் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. ஐயப்ப பக்தர்கள் வருகையினால் கடந்த இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த அளவில் நகரில் கோடி ரூபாயை நெருங்கும் அளவில் பல லட்சம் ரூபாய்க்கு பால்கோ விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை