உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கல் சாட்சியாபுரம் ரோட்டில் வாறுகால், ரோடு பணி துவக்கம்

திருத்தங்கல் சாட்சியாபுரம் ரோட்டில் வாறுகால், ரோடு பணி துவக்கம்

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருத்தங்கல் சாட்சியாபுரம் ரோடு பகுதியில் புதிதாக ரோடு வாறுகால் போடும் பணி துவங்கியது.திருத்தங்கல் சாட்சியாபுரம் ரோடு பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ரோடு முற்றிலும் சேதம் அடைந்திருந்தது. வாறுகாலும் இல்லாததால் கழிவு நீர் முழுவதும் தெருவிலேயே தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் கழிவு நீரை மிதித்து தான் வீட்டிற்குள்ளேயே செல்ல முடிந்தது. கொசு அதிக அளவில் உற்பத்தியாகி இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் கடித்து துன்புறுத்தியது. மழைக் காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் அடிக்கடி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அலைந்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இப்பகுதியில் புதிதாக வாறுகால் போடப்பட்டு ரோடு அமைக்கும் பணி துவங்கியது. இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்