உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கல்

பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கல்

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் மாணவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது.தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார் ,விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். கல்லுாரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி காசிராமன் வேலை வாய்ப்பிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். விப்ரோ லிமிடெட் நிறுவனம் கேம்பஸ் ஹையரிங் தேசிய தலைமை அதிகாரி ராதிகா ரவி, 1296 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.லாவெண்டல் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட், டேட்டா பேட்டர்ன், ஸ்மார்ட் டிவி, எச்.பி., உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் மாணவர்கள் பணி நியமன ஆணைகளை பெற்றனர். பி.எஸ்.ஆர்., கல்விக் குழும கல்லுாரி முதல்வர் மகேஸ்வரி, பேராசிரியர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்புத்துறை அதிகாரி சுதாகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை