உள்ளூர் செய்திகள்

காவடித் திருவிழா

சிவகாசி: சிவகாசியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குழந்தைவேலன் காவடி திருவிழா நடந்தது. குழந்தைகள் காவடி ஏந்தி சந்தி கூட விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு அக்னி விநாயகர் கோயில், கடை கோயில், கருப்பசாமி கோயில், பெருமாள் கோயில், சிவன் கோயில், முருகன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில் வழியாக மாரியம்மன் கோயில் சென்று தரிசனம் செய்தனர்.பள்ளி மாணவர்கள், தாங்கள் நன்றாகப் படித்து, நல்ல நிலைக்கு வர வேண்டும் என வேண்டி காவடி எடுத்து ஊர்வலம் சென்றனர். மாணவர்களுக்கு சீருடை, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி