மேலும் செய்திகள்
மின் குறைதீர் முகாம்
07-Sep-2025
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறந்து 2 ஆண்டுகள் ஆகியும் சொந்த கட்டடம் இல்லாததால் வாகன ஓட்டுனர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ராஜபாளையம் நகர் பகுதி அருகே இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கிருஷ்ணன்கோவிலுக்கு 2019ல் மாற்றலானது. இதனால் ராஜபாளையம் சுற்றுப்பகுதியினர் 40 கி.மீ., கடந்து செல்ல வேண்டியதாகியது. இதையடுத்து ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தென்காசி ரோட்டில் தற்காலிக வாடகை கட்டடத்தில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், சிவசங்கர் திறந்து வைத்தனர். 2 ஆண்டுகளாக வாடகை கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் புதிய வாகனங்கள் பதிவு, புதுப்பிப்பு, புதிய லைசென்ஸ் என அலுவலகத்தை நாடும் நிலையில் மாரியம்மன் கோயில் அருகே, புது பஸ் ஸ்டாண்ட் இணைப்பு சாலை அருகே என வெவ்வேறு இடங்களில் வாகன ஆய்வு நடப்பதால் மக்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாகின்றனர். சொந்த கட்டட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
07-Sep-2025