உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நைலான் ஜாக்கெட்டால் போக்குவரத்து போலீசார்...அவதி

நைலான் ஜாக்கெட்டால் போக்குவரத்து போலீசார்...அவதி

விருதுநகர்:விருதுநகரில் போக்குவரத்து போலீசார் பகலிலும் நைலான் ஜாக்கெட் அணிவதால் பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.நான்கு வழி சாலையில் இரவு நேரங்களிலே அதிகமான வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்காக நான்கு வழி சாலை சந்திப்புக்களில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். இவர்களுக்காக அரசு, கையில் வண்ண விளக்குகளும், நைலான் ஜாக்கெட் வழங்கியுள்ளது. இது இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வரும்போது விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் வண்ணம் தயாரிக்கப்பட்டது. இரவு நேரத்தில் அணிந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாரை, தற்போது பகலிலும் அணிந்து வேலை செய்ய போலீஸ் அதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர். பகலில் இந்த உடை அணிந்து பணியாற்றும்போது போக்குவரத்து பிரிவு போலீசார் என்பது தெரியவேண்டும் என்பதற்காக இந்த உடையை அணிந்து பணியாற்ற வற்புறுத்துகின்றனர். வெயில் நேரத்தில் இதை அணிவதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் எரிச்சல் ஏற்பட்டு, பணியை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர். மேலும், நைலான் ஜாக்கெட்டால் உடலில் அரிப்பும் விரைவில் சோர்வும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இரவு நேரங்களில் மட்டும் நைலான் ஜாக்கெட் பயன்படுத்த அனுமதிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ