உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தார் கழிவுகளை அகற்றாமல் புதிய ரோடு; மண்வளம் பாதிப்பு

தார் கழிவுகளை அகற்றாமல் புதிய ரோடு; மண்வளம் பாதிப்பு

விருதுநகர் : விருதுநகரில் சூலக்கரையில் இருந்து குல்லுார் சந்தைக்கு செல்லும் ரோடு புதியதாக அமைக்கப்பட்டது. ஆனால் பழைய ரோட்டின் தார் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் ரோட்டின் ஓரங்களில் கொட்டப்பட்டு இருப்பதால் மண்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரோடுகளை சீரமைக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளிடம் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சி அமைப்புகளும் போக்குவரத்திற்கு தகுந்தவாறு பேவர் பிளாக்கற்கள், கான்கிரீட், தார் ரோடுகளாக அமைத்து வருகின்றனர்.விருதுநகரின் சூலக்கரையில் இருந்து குல்லுார்சந்தைக்கு செல்லக்கூடிய ரோடு சில வாரங்களுக்கு முன்பு புதிய தார் ரோடாக அமைக்கப்பட்டது. இதற்கான பணிகளின் போது பழைய தார் ரோடு பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய தார் ரோட்டை அமைத்தனர். இப்படி பெயர்த்து எடுக்கப்பட்ட தார் ரோட்டை முறையாக அகற்றி அப்புறப்படுத்தாமல் ரோட்டின் ஓரங்களில் கொட்டி வைத்துள்ளனர்.இந்த ரோடு அமைக்கும் பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் தார் கழிவுகளை அகற்றாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். இவை மண்ணோடு மண்ணாக கலந்து விட்டது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.இந்த ரோட்டின் ஓரங்களில் உள்ள மரங்கள், செடிகள் பட்டுபோகும் சூழல் உள்ளது. எனவே புதிய ரோடு அமைக்கும் பணிகள் மேற்கொண்டு பழைய தார் கழிவுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி