உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை: ஸ்ரீவி., ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை: ஸ்ரீவி., ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் திருவண்ணாமலை ஊராட்சிக்குட்பட்ட ஆண்டாள்புரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது.நகராட்சி 14வது வார்டை ஒட்டிய இப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக தாமிரபரணி தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் நேற்று காலை 11:00 மணியளவில் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக செய்வதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி