உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விஜய் போல் மலிவான, இழிவான அரசியலை யாரும் செய்ததில்லை வன்னி அரசு பேட்டி

 விஜய் போல் மலிவான, இழிவான அரசியலை யாரும் செய்ததில்லை வன்னி அரசு பேட்டி

ராஜபாளையம்: ''தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் போன்று இந்தியாவிலேயே மலிவான இழிவான அரசியல் யாரும் செய்ததில்லை,'' என, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: தன்னைக்காண வந்த 41 பேர் இறந்த போது எந்தவிதமான பொறுப்பும் ஏற்காமல் மனசாட்சி இன்றி ஓடி ஒளிந்து கொண்ட மிகப்பெரிய கோழை விஜய். நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டு விட்டு ஒரு மாதத்திற்கு பின் நிதி கொடுத்ததாக கூறி இந்தியாவிலேயே மலிவான இழிவான அரசியலை யாரும் செய்ததில்லை. நம்பகத்தன்மையற்ற முதிர்ச்சியற்ற மிக மோசமான பா.ஜ.,வின் ஒட்டுக்குழுவாக கட்சியை விஜய் நடத்தி வருகிறார். வரும் தேர்தலில் இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பை அல்லது அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை கூட்டணியில் கேட்டு பெறுவது எங்களின் விருப்பம். போராடக்கூடிய வி.சி.க.,வை சேர்ந்தவர்கள் அதிகமாக சட்டசபை செல்வது தமிழகத்திற்கு நல்லது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அம்பேத்காரியம்
நவ 24, 2025 08:50

சும்மா அடிச்சு விடு. உங்களை மாதிரி பிளாஸ்டிக் சேர் சமூக நீதி அரசியல், தமிழர்களை கொன்று குவித்த கான் க்ராஸ், ராச பக்ச ஆகியோரிடம் சென்று கூழை கும்பிடு போட்டு பரிசு வாங்கி வந்தது, கேவலம் இரண்டு சீட்டுக்கு...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை