விருதுநகர்: பேவர் பிளாக் ரோடுகள் சேதம், மேன்ஹோல்களால் விபத்து, மண் நிறைந்த வாறுகால்களால் சுகாதாரக் கேடு என பல்வேறு பிரச்னைகளில் தவித்து வருகின்றனர் விருதுநகர் பெ.சி., பெரிய கிணறுத்தெரு மக்கள்.விருதுநகர் நகராட்சி 20வது வார்டில் நாச்சி, சுலோச்சனா, சேக்கிழார், சந்திகூடம், பெரியகிணறு, கொல்லர், தெற்கு ரத வீதி, தபால் அலுவலகம், பெ.சி., பழக்கடைச் சந்து, வில்காரன் கோயில் தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் பெ.சி., தெருவில் உள்ள குடிநீர் தொட்டிகள் சரியாக பராமரிக்கப்படாமல் நள்ளிகளுக்கு பூட்டு போட்டு வைத்துள்ளனர்.பேவர் பிளாக் ரோடுகள் சேதமடைந்து மேடு பள்ளங்களாக மாறி உள்ளன. இந்த வார்டில் 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. வாறுகால்களில் மண் நிறைந்து கழிவு நீர் செல்வதற்கு கூட போதிய இடமில்லாமல் உள்ளது.சந்திகூடத்தெருவில் உள்ள காய்கறி மார்கெட்டில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். ரோட்டின் உயரத்தை விட மேன்ஹோல்களின் உயரம் கூடுதலாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது.தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் பணி முடிந்து சொந்த வீடுகளுக்கு செல்வதற்கு கூட மக்கள் அஞ்சுகின்றனர்.இந்த பகுதிகளில் வாறுகால்களில் அடிக்கடி மண் நிறைந்து விடுகிறது. இதனால் கழிவு செல்வதற்கு கூட வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் வாறுகாலில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும்.- - பிரபாகரன், ஜெராக்ஸ் கடை உரிமையாளர்.வீடுகளுக்கு வரக்கூடிய குடிநீர் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதனால் பலர் விலை கொடுத்து குடிநீரை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே வீடுகளுக்கு 5 நாள்களுக்கு ஒரு முறையாவது குடிநீரை வழங்க வேண்டும்.-- ஆறுமுகசாமி, கொலு பொம்மை தயாரிப்பாளர்.
குடிநீரின்றி தவிப்பு
குடிநீரின்றி தவிப்பு
பேவர் பிளாக் கற்கள் சரியாக அமைக்கப்படாததால் ரோடுகள் மேடுபள்ளங்களாக மாறியுள்ளது. இந்த ரோட்டில் டூவீலர், சைக்கிளில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மேடு பள்ளங்களாக உள்ள ரோட்டை சீரமைக்க வேண்டும்.-- பெத்துராஜ், திரைப்பட நடிகர்.
ரோடுகளை சீரமையுங்கள்