உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

சாத்துார்,: சாத்துார் பால் நாடார் திருமணமண்டபத்தில் த.மு.எ.க.ச.சார்பில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.சாத்துார் கிளை தலைவர் பிரியா கார்த்திக் தலைமை வகித்தார். பொருளாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் லட்சுமி காந்தன் வரவேற்றார். மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வனின் இடையில் ஆடும் ஊஞ்சல் என்ற கட்டுரை நுாலைகிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரித் தலைவர் ராஜீ, நகராட்சி தலைவர் குருசாமி, ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா, தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர் கடற்கரை ஆகியோர் வெளியிட்டனர்.எழுத்தாளர்கள் மணிமாறன், தேனி வசந்தன், மாதவராஜ், கங்கா கார்த்திக், ராஜ்பாபு, நுாலகர் ராதா உட்படபலர் கலந்து கொண்டனர். எழுத்தாளர்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ