உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேர்தல் வாக்குறுதியான செவல் கண்மாய் பராமரிப்பின்றி பாழாவதால் விரக்தியில் மக்கள்

தேர்தல் வாக்குறுதியான செவல் கண்மாய் பராமரிப்பின்றி பாழாவதால் விரக்தியில் மக்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை செவல் கண்மாய் முறையாக பராமரிப்பு செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் மட்டும் கண்மாய் பிரச்னையை கட்சியினர் கையில் எடுக்கும் அரசியில் கட்சியினர் அதன் பிறகு கண்டு கொள்ளாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சி 2 வது வார்டில் உள்ளது செவல் கண்மாய். நகராட்சி 2, 3, 4, 5, 6 வார்டுகள் வழியாக இந்த கண்மாய் செல்கிறது. முன்பு இந்த கண்மாய் இந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது நகராட்சி மூலம் போர்வெல் அமைத்து இந்த கண்மாய் நீரை நகரில் வினியோகம் செய்தனர். நாளடைவில் கண்மாயை பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டனர். கண்மாய்க்கு மழை நீர்வரத்து ஓடைகள் அடைபட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் விட்டன. கண்மாயில் கழிவு நீரும் சாயக்கழிவும் சேர்கிறது. இந்தப் பகுதிகளை குடியிருப்பவர்கள் குப்பையை கண்மாயில் தான் கொட்டுகின்றனர். கொசுக்களின் கேந்திரமாக கண்மாய் உள்ளது.தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்காக கண்மாய் பிரச்னையை கையில் எடுக்கின்றனர்.இந்தக் கண்மாயின் ஒரு பகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.,வினர் வாரினர். மீதமுள்ள பகுதி சுகாதார கேடாக உள்ளது.தேர்தல் வருவதை ஒட்டி, கண்மாயை ரூ.3.54 கோடி மதிப்பில் கண்மாயை புணரமைப்பு செய்யவும் கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றவும், தூர்வாரும் பணியையும் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் இதற்கான பணியை துவக்கி வைத்தார். முறையாக இந்த பணியைச் செய்து கண்மாயை துார்வாரி மழைநீர் சேகரமாகும் வகையில் செய்தால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் பெருகும் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி