உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலைபேசி திருட்டு வாலிபர் கைது

அலைபேசி திருட்டு வாலிபர் கைது

வத்திராயிருப்பு: கூமாபட்டி அன்சாரி நகரை சேர்ந்தவர் திவான்ஒலி பாதுஷா, 29, இவர் கூமாபட்டி தைக்கா பஜாரில் அலைபேசி பழுதுபார்த்தல் மற்றும் விற்பனை கடை வைத்துள்ளார். டிச. 27 இரவு கடையை பூட்டிவிட்டு சென்றவர் மறுநாள் காலையில் கடை திறக்க வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, புதிதாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 அலைபேசிகள் ரூ. 6 ஆயிரம் பணமும் திருடப்பட்டுள்ளது.கூமாபட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், 26, என்பவரை கைது செய்து, அலைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை