உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது சாத்துார் : தாயில் பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து, 48. நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டில் சர வெடி தயாரித்தார்.போலீசார் சரவெடிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். சிறுமி மாயம் சாத்துார் : சிவகாசி தெற்கு ஆனைக்கூட்டத்தை சேர்ந்தவர் காளிராஜ், இவரது இளைய மகள் 17 வயது சிறுமி வீட்டில் இருந்தவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் பாம்பு காரியாபட்டி : காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை கணினி அறையில் பாம்பு புகுந்தது. காரியாபட்டி தீயணைப்பு துறையினர் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். பாம்பை பிடித்ததற்கு பின் ஊழியர்கள், அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை