உள்ளூர் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

வாலிபர் பலி சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் சிவன் நகரை சேர்ந்த தவசியப்பன் 37. மது அருந்தும் பழக்கம் உள்ள இவரை மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்தனர். ஒன்றரை மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் மீண்டும் அதிக அளவில் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் காயத்துடன் மது அருந்திய நிலையில் இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். ---- கஞ்சா விற்றவர் கைது சிவகாசி: சிவகாசி நடுவப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ் பாண்டி 29. இவர் நாகலாபுரம் அரசு பள்ளி அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பெண் பலி திருத்தங்கல்: திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சாந்தி 35. இரண்டு ஆண்டுகளாக கை, கால் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இந்நிலையில் இவர் வீட்டில் இறந்து கிடந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !