உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குற்றங்கள் அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்

குற்றங்கள் அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டத்தில் 47 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில் உள்ள போலீசார், சட்டம், ஒழுங்கு உட்பட பல பணிகளில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.பூட்டிய வீடுகளில் புகுந்து கொள்ளை, நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி, வாகன திருட்டுகள், கஞ்சா விற்பனை உட்பட பல சம்பவங்கள் கன ஜோராக நடக்கிறது. போலீசார் ரோந்து பணியில் இருக்கிறார்கள் என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது.ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒரு கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவை போலீசார் கடமைக்கு பறிமுதல் செய்துள்ளனர். டூவீலர்கள் காணாமல் போவது தொடர்கதையாக உள்ளது. அருப்புக்கோட்டையில் 5 நாட்களுக்கு முன்பு புறநகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் 102 பவுன் நகை கொள்ளை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருச்சுழி பகுதியில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து நகைகள் பறித்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன் தினம் பாலவநத்தம் - கோபாலபுரம் ரோட்டில் டூவீலரில் வந்த ஒருவரிடம் 40 ஆயிரம் பணத்தை ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். அருப்புக்கோட்டையில் பஸ் ஸ்டாப்புகள், பஸ்சில் செல்லும் பெண்களிடம் பிக்பாக்கெட் அடிப்பது தினமும் நடக்கிறது. தினமும் நடக்கும் குற்றச்செயல்களால் பொதுமக்கள் பாதுகாப்பு இல்லை என்ற பயத்தில் உள்ளனர். அருப்புக்கோட்டையில் போதுமான போலீசார் இல்லாததால் இரவு நேர ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. மாவட்டம் முழுவதும் ஸ்டேஷன்கள், முக்கிய ரோடுகள், சந்திப்புகள், தெருக்களில் அதி நவீன சிசிடிவி., கேமராக்கள், மானிடரிங்அறைகள் உட்பட பல வசதிகள் இருந்தும் குற்றச் செயல்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை. கொள்ளையர்களையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டு குற்ற செயல்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sethu
மே 29, 2024 09:57

என்ன அதுக்குள்ளே அவசரம் இன்னும் உண்மையான தமிழ் மக்கள் திமுக என்ற ஓங்கோல் கும்பலுக்கு ஒட்டு போடுங்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை