மேலும் செய்திகள்
கல்லறை திருநாள் வழிபாடு
03-Nov-2025
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை
03-Nov-2025
இன்றைய நிகழ்ச்சி (நவ. 3)
02-Nov-2025
ராஜபாளையம் : நாய்கள் தொல்லை, மழைநீர், கழிவு நீர் செல்ல வாறுகால் வசதி இல்லை, சமூக விரோதிகள் நடமாட்டம் உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி பேங்கர்ஸ் காலனி குடியிருப்போர் தவித்து வருகின்றனர்.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலப்பாட்டம் கரிசல்குளம் பேங்கர்ஸ் காலனி பகுதியில் குடியிருப்போர் சண்முகவேல், ஜெபராஜ், சேது, பாஸ்கர், குமாரி கூறியதாவது:காலனி உருவாகி 30 வருடங்கள் ஆகின்றன. பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் திருவள்ளுவர் நகர் மேற்கு, வடக்கு, பாபுஜி நகர் மதுரை வீரன் காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளின் கடந்து செல்ல மெயின் பகுதியாக உள்ளது.மேற்கே ராஜூக்கள் கல்லுாரி பகுதி தொடங்கி பல்வேறு குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்து செல்லும் கழிவுநீர், மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் புதிய குடியிருப்புகளால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.வருவாய்த் துறையினரிடம் முறையிட்டு தற்காலிக தீர்வை மட்டும் பெற வேண்டி உள்ளது. மழை நீர் வாய்க்கால் அளவீடுசெய்து மீட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.30 ஆண்டுகள் கழித்து தற்போது தான் புதிய ரோடு பணிகள் நடைபெற்று வருகிறது. விடுபட்டுள்ள தெருக்களின் பணிகளுக்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என கூறுகின்றனர். புதிய தெருக்களை முறையான வறுகாலுடன் அமைக்க வேண்டும்.இப்பகுதியை சுற்றியுள்ள இறைச்சி கடைகளை தேடி வரும் நாய்கள் இரவு நேரங்களில் வருவோரை கூட்டமாக விரட்டுகிறது. குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் தனியாக தெருக்களில் செல்வதற்கு அஞ்சுகின்றனர்.வாறுகால் இன்றி வெளியேற்றப்படும் கழிவு நீரோடு மழைநீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால் பகல் நேரங்களிலும் கொசு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றோம். கொசு ஒழிப்பு பணிகள் தொடர வேண்டும்.திருவள்ளுவர் நகரிலிருந்து நுழையும் பகுதி மின் விளக்கு வசதியில்லை. இதனால் இருட்டில் நின்றபடி வேறுபகுதியில் இருந்து வரும் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே இருந்தது போல் போலீசாரின் ரோந்தும் கண்காணிப்பு கேமராவும் அவசியமாகிறது.தேவைகள் குறித்து கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வசதிகள் முழுமை அடையவில்லை. எனவே எங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றனர்.
03-Nov-2025
03-Nov-2025
02-Nov-2025