உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வரும் ராஜபாளையம் அம்மா பூங்கா--

சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வரும் ராஜபாளையம் அம்மா பூங்கா--

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருகிறது.ராஜபாளையம் முடங்கியார் ரோடு கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் இளைஞர்கள், மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் குழந்தைகள் விளையாடவும் பல லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் விளையாட்டு உபகரங்களான ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு சாதனங்களுடன் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.பூங்காவை சுற்றியுள்ள தெருவில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டதால் சுற்றுச்சுவர் உயரம் குறைந்து சமூக விரோதிகளால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளதால் பெண்கள், குழந்தைகள் அச்சமின்றி உபயோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.உடற்பயிற்சி கூடத்திற்குள் தளவாட பொருட்கள் பாதுகாப்பு இன்றி சேதம் அடைந்துள்ளன. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உரிய முறையில் பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ