உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியிருப்போர் குரல் . . .

குடியிருப்போர் குரல் . . .

அருப்புக்கோட்டை-: அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டி நெசவாளர் காலனியில் குடிநீர் வசதி இல்லாமலும், வாறுகாலின்றி தேங்கும் கழிவுநீர், குப்பையை ஆங்காங்கு கொட்டி எரிப்பதால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி நெசவாளர் காலனி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தலைவர் தர்மலிங்கம், செயலர் இளங்கோவன், பொருளாளர் நாகராஜன், துணைச்செயலாளர் கணபதி, உறுப்பினர்கள் கந்தசாமி, குருமணி, தெய்வானை, உண்ணாமலை கூறியதாவது: எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். சங்கிலி நகரில் எந்தவித வசதிகளும் இல்லை. பல தெருக்களில் ரோடு இல்லை. எங்கள் பகுதிக்கு வரும் மெயின் ரோடு அருகில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது. வாறுகாலின்றி கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. ஊராட்சி மூலம் குடிநீர் வழங்குவதற்காக பகிர்மான குழாய்கள் பதிக்க தோண்டி விட்டு இருக்கின்ற ரோட்டையும் சேதமாக்கி விட்டனர். ஆங்காங்கு மேலும் பள்ளமுமாக தெருக்களில் நடக்க முடியாத நிலையில் உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் மூலம் குடிநீர் வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் கூறியதால் இந்தப் பகுதி மக்கள் 2 ஆயிரத்து 700 ரூபாய் டெபாசிட் தொகை கட்டி 2 ஆண்டுகளாகியும் குடிநீர் வரவில்லை. கு ழா ய் இணைப்பு கொடுத்ததோடு சரி. இந்தத் திட்டத்தில் போடப்பட்ட பகிர்மான குழாய்கள் பல பகுதிகளில் பெயர்ந்துள்ளது. எங்களுக்கு தாமிரபரணி குடிநீரும் வருவது இல்லை. புதிய திட்டத்திலும் குடிநீர் இல்லை. குடிநீரை அதிக விலை கொடுத்து வெளியில் வாங்குகின்றோம். எங்க ள் பகுதியில் குப்பை ஆங்காங்கு தேங்கி கிடக்கின்றன. ஊராட்சி மூலம் குப்பை வாங்க வருவது இல்லை. குப்பையை தெருவின் பல பகுதிகளில் கொட்டி எரிப்பதால் சுவாச கோளாறு ஏற்படு கிறது. ஆண்க ளுக்கு என தனியாக சுகாதார வளாகம் தேவையாக உள்ளது. இங்குள்ள ஊருணி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இதன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. கழிவுநீர் தான் சேருகிறது. ஊராட்சி நிர்வாகம் இதை பராமரிக்க வேண்டும். பல தெ ருக்களில் தெரு விளக்குகள் பழுதாகி உள்ளன. எங்கள் பகுதி களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை