உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாத யாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்காததால் விபத்து அபாயம்

பாத யாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்காததால் விபத்து அபாயம்

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்துார், பழனி செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்காததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் இருந்து முருக பக்தர்கள் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசத்திற்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக திருச்செந்துார், பழனி செல்வது வழக்கம். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால் ஏதுவான இடத்தில் தங்கி இரவில் நடந்து செல்வர்.இரவு முழுவதும் தொடர்ந்து நடப்பதால் இவர்கள் மீது தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் மோதி விடாமல் இருக்க மாவட்ட போலீஸ் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கப்படும். இதை பக்தர்கள் சுமந்து செல்லும் பைகளில் ஒட்டி விடுவர். இதனால் பக்தர்கள் செல்லும் திசையில் பின்னால் வரும் வாகனங்களுக்கு முன்னால் பக்தர்கள் செல்கிறார்கள் என தெரிந்து அதற்கேற்ப வாகனங்களை இயக்குவர்.இந்நிலையில் வழக்கமாக வழங்கப்பட்டு வந்த ஒளிரும் ஸ்டிக்கர் போலீசார் இந்தாண்டு பாதயாத்திரை செல்வர்களுக்கு வழங்கவில்லை. இதனால் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சிவகாசி வடக்கு ஆனைக்குட்டத்தில் இருந்து திருச்செந்துாருக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களில் ஒருவர் பலியானார். இருவர் சிகிச்சை பெறுகின்றனர். இரவில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்காததே விபத்திற்கு காரணம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.மாவட்டத்தில் இருந்து ஜன. 15 பொங்கல், ஜன. 25 தைப்பூசத்திற்கு அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்துார், பழனி செல்ல உள்ளனர். எனவே மாவட்ட போலீசார் பக்தர்களின் பாதுகாப்புக்காக வழக்கமாக வழங்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை