உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலைபேசி லிங்கை தொட்டதால் ரூ.8.29 லட்சம் போச்சு

அலைபேசி லிங்கை தொட்டதால் ரூ.8.29 லட்சம் போச்சு

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கரிசல்குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் அலைபேசிக்கு வந்த லிங்க் கிளிக் செய்து, வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்து அலைபேசியில் பேசிய நபர் கூறியதை நம்பி 16 இலக்க எண்ணை டயல் செய்ததால் ரூ. 8.29 லட்சம் பறிகொடுத்தார்.சிவில் இன்ஜினியரான இவரது அலைபேசி எண்ணிற்கு ஜன.27ல் https://doss.short.gy/sbi என்ற லிங்க் வந்தது. இதை கிளிக் செய்து தனது வங்கி கணக்கின் முழுவிபரத்தையும் பதிவு செய்த பின் இவரின் அலைபேசிக்கு 84537 36275 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.அதில் பேசிய நபர் 16 இலக்க எண்ணை கூறி அதை டயல் செய்யவும் என தெரிவித்துள்ளார். இதை நம்பி டயல் செய்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து இருதவணைகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 900 பறிபோனது. இதுகுறித்து விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ