உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீர்வரத்து ஓடையில் குப்பையை கொட்டிய துாய்மை பணியாளர்கள்

நீர்வரத்து ஓடையில் குப்பையை கொட்டிய துாய்மை பணியாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து ஓடையில் குப்பையை கொட்டிய நகராட்சி வாகனத்தை அவ்வழியே சென்ற மக்கள் சிறைப்பிடித்தனர்.நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரமான குப்பைகளை ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி வாகனத்தில் கொண்டு வந்து நேற்று காலை 10:00 மணியளவில் பெரியகுளம் நீர்வரத்து ஓடையில்கொட்டினர். இதனை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், குப்பையை கொட்ட விடாமல் தடுத்து வாகனத்தை சிறைப்பிடித்தனர்.தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். குப்பையை கொட்டிய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை