உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நாளை எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்கள்

 நாளை எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நாளை அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். 2026 ஜன. 1ஐ தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கிறது. இதுவரை 15 லட்சத்து 82 ஆயிரத்து 225வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த ஓட்டுச்சாவடிமையங்களில் நாளை (நவ. 23) முகாம்கள் நடக்கிறது. படிவங்கள் பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை