உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அங்கன்வாடி மையம் முன் தேங்கிய மழை நீர்

அங்கன்வாடி மையம் முன் தேங்கிய மழை நீர்

சிவகாசி : சிவகாசி அருகே ஆனையூரில் அங்கன்வாடி மையம் முன்பு தேங்கியுள்ள மழை நீரால் குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.சிவகாசி அருகே உள்ள ஆனையூரில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் இருவருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையம் முன்பு வளாகம் தாழ்வாக உள்ளது. சமீபத்தில் சிவகாசி பெய்த தொடர் மழையால் அங்கன்வாடி மையம் முன்புறம் தண்ணீர் தேங்கியுள்ளது.குழந்தைகள் இதனை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பாதிப்பிற்கும் ஆளாகின்றனர். மழை எப்போது பெய்தாலும் இதே நிலைதான் ஏற்படுகின்றது. எனவே அங்கன்வாடி மையம் முன்பு மழை நீர் தேங்காாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ