| ADDED : மார் 12, 2024 06:03 AM
விருதுநகர் : விருதுநகரில்ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி, குழந்தை திருமணம், உயர்கல்வி, இயற்கை வளம் பாதுகாத்தல் குறித்த கருத்தரங்கு நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.எஸ்.பி.,பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலை வகித்தார். இதில்பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள், தண்டனைகள், தாட்கோ திட்டங்கள், உயர்கல்வி, குழந்தை திருமணம் தடுப்பு, இயற்கை வளம் பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பேசினர்.கலெக்டர் பேசுகையில், கடந்த 11 மாதங்களில் 200 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, அதில் 120 தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜபாளையம், சிவகாசி, திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன.கடந்த ஓராண்டில் 19 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் கருத்தரிப்பு 300 முதல் 400 வரை உள்ளது. 19 வயதுக்குட்பட்டு குழந்தைப்பேறு அடையும், தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. பிறக்கும் குழந்தையும் எடை குறைவாக உள்ளது என்றார்.முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் விசாலாட்சி, சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி, தாட்கோ மேலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.