உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனையில் 2வது மாடியில் ஏறி தற்கொலை முயற்சி

அரசு மருத்துவமனையில் 2வது மாடியில் ஏறி தற்கொலை முயற்சி

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் குழாய் வழியாக 2 வது மாடியில் ஏறி குதித்து விடுவதாக தற்கொலை செய்து விடுவதாக மிரட்டிய பாண்டி பெருமாளை 25, ஊழியர்கள் மீட்டனர். விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 32. இவருக்கு நேற்று முன்தினம் மதியம் வீட்டில் வலிப்பு ஏற்பட்டு விருதுநகர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார். இவரின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யாமல் உடனடியாக உடலை வழங்க வேண்டும் எனக்கூறி உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை தண்ணீர் குழாய் வழியாக 2 வது மாடி வரை ஏறியஉறவினர் பாண்டி பெருமாள் 25, உடலை உடனே வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இவரை ஊழியர்கள் மீட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை