உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத சுகாதார வளாகம், பராமரிப்பற்ற ஊருணி முகவூர் ஊராட்சி மக்கள் அவதி

செயல்படாத சுகாதார வளாகம், பராமரிப்பற்ற ஊருணி முகவூர் ஊராட்சி மக்கள் அவதி

தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே முகவூரில் காட்சி பொருளாக உள்ள மகளிர் சுகாதார வளாகம், பராமரிப்பற்ற ஊருணி உட்பட பல்வேறு பிரச்சனைகளில் தீர்வு காண மக்கள் எதிர்பார்க்கின்றனர். ராஜபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முகவூர் ஊராட்சியில் பாரதி நகர், முகவூர் கிராமப்பகுதி என 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளது. சொக்கநாதன் புத்துார் மெயின் ரோட்டில் இயங்கி வந்த மகளிர் சுகாதார வளாகம் செயல்பாடற்று புதர்மண்டி காட்சி பொருளாக மாறி உள்ளது. அப்புறப்படுத்தி விட்டு புதிதாக அமைக்காததால் திறந்தவெளி அவலம் ஏற்படுகிறது. குப்பைகளை வீடுகளில் வந்து வாங்கியும் விழிப்புணர்வு இல்லாமல் சிலர் ரோட்டோரம் கொட்டி செல்கின்றனர். ஊராட்சியின் தொலைவில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் தொட்டி, மண்புழு உரக்கூடம் செயல்படாமல் உள்ளதால் கண்மாய் ஓரம் கொட்டுகின்றனர். பாரதி நகரில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததால் பொது சமுதாயக்கூடத்தில் இயங்குகிறது. 250 குடும்பங்கள் உள்ள இப்பகுதி மெயின் ரோட்டில் நிழற்குடை இல்லாததால் மாணவர்கள், பயணிகள் வெயில் மழையில் பாதித்து வருகின்றனர். குடிநீர் சப்ளை கால தாமதத்தை சரி செய்ய வேண்டும். ஜல்ஜீவன் சப்ளைக்கு தோண்டிய தெருக்களில் செப்பனிடாததால் போக்குவரத்து பாதிக்கிறது. குடியிருப்பு பெருகி உள்ள இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கட்டுப்படுத்தாததால் கழிவுகள் வெளியேறுவதிலும் வாகன போக்குவரத்திலும் சிக்கலாகிறது. கூமாச்சி மலை அருகே உள்ள உரக்கிடங்கை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி