உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்து ஏற்படுத்தும் ரோடு பள்ளங்கள்: வாகன ஓட்டிகளுக்கு தொடரும் சிக்கல்

விபத்து ஏற்படுத்தும் ரோடு பள்ளங்கள்: வாகன ஓட்டிகளுக்கு தொடரும் சிக்கல்

ராஜபாளையம்: மாவட்டத்தின் பெரும்பாலான ரோடுகள் முறையான பராமரிப்பன்றி ஆபத்தான பள்ளங்களுடன் மாறி உள்ளது. விபத்திற்கு காரணமான பள்ளங்களை உடனடியாக சீரமைக்காமல் மேம்போக்கு பணிகளை செய்து சமாளிக்கும் அதிகாரிகளால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலை, மாநில, மாவட்ட, கிராம ரோடுகள் என அனைத்திலும் இடை இடையே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலங்களில் இப்பிரச்சினை அதிகரிப்பதற்கு முறையான வடிகால் இல்லாததும் தண்ணீர் தேங்கும்படி அமைக்கப்படுவதே காரணம். லேசான பாதிப்பின் போதும் இவற்றில் வாகனங்கள் தொடர்ந்து சென்று பள்ளங்களை மேலும் பெரிதாகின்றன.இவை ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கனரக வாகனங்கள் இவற்றை தவிர்க்க ஒதுங்கும்போதும், எதிர்கொள்ளும் போது திடீர் என வேகத்தை குறைப்பதும் தொடர்ந்து வரும் வாகனங்கள் விபத்தினை சந்தித்து வருகின்றன. வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதுடன், சிறு காயங்களுடன், உயிரிழப்பு வரை இவை காரணமாகின்றன.இரவு நேரங்களிலும், வாகன ஓட்டிகளுக்கு ரோடுகளில் உள்ள இது போன்ற ஆபத்தான பள்ளங்கள் தெரியாததால் விபத்து அதிகரிக்கிறது. குடிநீர்நீர் குழாய் உடைப்பினால் தண்ணீர் தேங்குவது, தரமற்ற வகையில் ரோடு பணிகள், வடிகால் இன்றி மழைக்கு தண்ணீர் தேங்குவது போன்ற காரணங்களால் ரோடு சேதம் ஆகின்றன.ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் மாரியம்மன் கோயில் வரை ரோட்டின் இரண்டு பக்கமும் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளும், மழைநீர் தேங்கி ஏற்பட்ட பள்ளங்களும் வாகன ஓட்டிகளை பாதித்து வருகின்றனசேதம் அடைந்த ரோடுகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக பராமரிப்பது மழைக்காலங்களில் விபத்திலிருந்து மக்களை காக்க உதவும். தவிர்த்து தற்காலிக தீர்வாக கட்டட கழிவுகளை நிரப்பி மக்களை அதிகம் பாதிக்கிறது. நிரந்தர தீர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை