உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிகரித்துள்ள டூவீலர் மணல் திருட்டு --கண்டுகொள்ளாத போலீசார்

அதிகரித்துள்ள டூவீலர் மணல் திருட்டு --கண்டுகொள்ளாத போலீசார்

சேத்துார்: சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி ஆறு இதை ஒட்டியுள்ள கேட்பாரற்ற பட்டா நிலங்களில் டூவீலர் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. போலீசாரின் ஆசியுடன் நடைபெறும் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.சேத்துார் அய்யனார் கோயில் ஆற்றில் மழைக்காலங்களில் நல்ல நீர்வரத்தும் ஆற்றில் இருந்து மணல் செரிவும் அதிகம் காணப்படும். இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அதை ஒட்டிய பட்டா நிலங்களிலும் டூவீலர்களில் ஒரு வண்டிக்கு 5 சாக்கு மூட்டைகளை அடுக்கி அசையா மணி விலக்கு, சேத்துார் பஸ் ஸ்டாண்ட் ஜீவா நகர் பாதை வழியாக செட்டியார் பட்டி, தளவாய் புரம், முகவூர் சுற்றுப்பகுதிகளில் குவித்து சட்டவிரோதமாக விற்பனை நடக்கிறது.காலை 6:00 மணி துவங்கி மாலை 6:00 மணி வரை 20க்கும் மேற்பட்ட டூவீலர்கள் மூலம் நடைபெறும் மணல் திருட்டை போலீசார் கண்டு கொள்ளாமல் விடுவது குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர். அசுர வேகத்தில் செல்லும் இவர்களால் இப்பகுதி விவசாய நிலங்களுக்கு செல்வோர், பொதுமக்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றனர்.இப்பகுதி விவசாய கமிட்டியினர் மூலம் தொடங்கப்பட்ட கண்காணிப்பு சோதனைச்சாவடியை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு துணை போகும் அலுவலர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி