| ADDED : நவ 28, 2025 08:01 AM
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அழகாபுரியில் மோட்டலில், சமைய லறையில் சுகாதாரகேடு காணப்பட்டதால், உணவகத்தின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தர விட்டனர். விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன், வத்திராயிருப்பு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன் குழு வினர் நேற்று மதியம் அழகா புரி அருகே மோட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் அறையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு காணப் பட்டது. மேலும் பழைய சிக்கன் 5 கிலோ, மாவு 37 கிலோ, பழைய சப்பாத்தி 13 கிலோ கண் டறியப்பட்டது. பின்னர் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் லேபிள் விவரங்கள் இல்லாத 3 கிலோ கிழங்கு மாவு, ஒரு கிலோ முந்திரி பருப்பு, 7 லிட்டர் வினிகர் பறிமுதல் செய்யப் பட்டது. இதனையடுத்து மோட்டலின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தும், நேற்று இரவு முதல் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வும், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உத்தர விட்டனர்.