மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
17 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு பேராட்டம்
17 hour(s) ago
ஆர்ப்பாட்டம்
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்
17 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை கொடுக்க முயன்ற தி.மு.க., ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு , ஏழாவது வார்டில் தி.மு.க.,சார்பில் போட்டியிடுபவர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம். இவர் தற்போது ஸ்ரீவி.,ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது டிரைவர் செந்தில் உட்பட ஏழு பேருடன் சேர்ந்து,நேற்று முன் தினம் இரவு11 மணிக்கு, மேட்டு முள்ளிக்குளம் பகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, டாடா சுமோவில் வேட்டி, சட்டைகளை கொண்டு சென்றார். இதை பார்த்த மேட்டு முள்ளிக்குளத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஊராட்சி செயலாளர் சண்முகவேல் பாண்டியன் அவர்களிடம் தகராறு செய்தார். இதனால் இருதரப்பினரையும் போலீசார், ஸ்ரீவி., தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க., வை சேர்ந்த நிர்வாகிகள், ஆறுமுகத்தை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஆறுமுகம், அவரது டிரைவர் செந்திலை போலீசார் கைது செய்து, சுமோவுடன் வேட்டி, சட்டைகளையும் பறிமுதல் செய்து, ஸ்ரீவி.,கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும், ஐந்து பேரை தேடிவருகின்றனர். இது போல் ஆறுமுகம் கொடுத்த புகாரின் படி, பாண்டியன் உட்பட 5பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago