| ADDED : ஆக 11, 2011 10:57 PM
ராஜபாளையம் : ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடிய மர்மநபர்கள், வீட்டு முன் நின்ற காரையும் கடத்தி சென்றனர் . ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் பால கதிரேசன்(75). இவரது மனைவி கோதை. இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். நேற்று முன்தினம் கோதைக்கு எலும்புமுறிவு ஏற்பட, மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால், வீடு பூட்டப்பட்டிருந்தது.வீட்டின் முன் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, நேற்று அதிகாலை வீடு திறந்து இருப்பதை பார்த்த பக்கத்துவீட்டுக்காரர், பால கதிரேசனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டிற்கு வந்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 10 பவுன் நகை, எல்.சி.டி. டிவி, டி.வி.டி., பிளேயர் மற்றும் வீட்டு முன் நின்ற கார் திருடப்பட்டு இருந்தது. கண்ணன் டி.எஸ்.பி., தெற்கு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயகுமார், எஸ்.ஐ.,க்கள் வீரபாண்டி, தேவசங்கரி விசாரிக்கின்றனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில், திருட்டுபோன காரை மதுரை மாட்டுதாவணி பஸ்ஸ்டாண்ட் அருகே போலீசார் மீட்டனர்.