மேலும் செய்திகள்
திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
7 hour(s) ago
மகர நோன்பு அம்பு விடுதல் விழா
7 hour(s) ago
கொத்தனார் பலி
7 hour(s) ago
விஜயதசமி விழா
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (அக். 3)
7 hour(s) ago
விருதுநகர் : ''இன்ஸ்பயர் விருது படைப்புகளை மாணவர்கள் தயாரிக்க, அறிவியல் தொழில் நுட்ப இயக்கம் சார்பில் 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,'' அறிவியல் தொழில் நுட்ப இயக்க இணை இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறினார். மாணவர்களிடையே அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை ஏற்படுத்த அறிவியல் தொழில் நுட்ப இயக்கம் சார்பில்ஆண்டு தோறும் 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 6 முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அறிவியல் தொழில் நுட்ப படைப்புகளை தயாரிக்க, தலா 5000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த படைப்புகளை மாவட்ட, மாநில அறிவியல் கண்காட்சியில் சமர்பித்து, இதில் தேர்வு பெறுவோர் தேசிய கண்காட்சிக்கு தகுதி பெறுவர். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு பரிசு, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படும். இதில் விருதுநகர் மாவட்ட மாணவர்கள் பங்கேற்கும் வகையில், இன்ஸ்பயர் விருது படைப்புகளை தயாரிக்க தலா 5000 ரூபாய் வழங்கும் விழா, விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளியில் நடந்தது. இந்த தொகையை கலெக்டர் பாலாஜி வழங்கினார். முதன்மை கல்வி அதிகாரி விஷ்ணுபிரசாத், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அறிவியல் தொழில் நுட்ப இயக்க இணை இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறுகையில்,'' தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 9733 பேருக்கு இன்ஸ்பயர் விருது படைப்புகளை தயாரிக்க தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 15ஆயிரத்து 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது வரை 25 மாவட்டங்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதற்காக அறிவியல் தொழில் நுட்ப இயக்கம் சார்பில் 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'', என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago