| ADDED : செப் 11, 2011 11:21 PM
விருதுநகர் : விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலை பெண்கள் கல்லூரிகளுக்கிடையேயான வாலிபால் போட்டி நடந்தது. வன்னிய பெருமாள் கல்லூரி முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது. மதுரை காமராஜர் பல்கலை உட்பட்ட பெண்கள் கல்லூரிகளுக்கிடையேயான வாலிபால் போட்டி, விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரியில் மூன்று நாட்கள் நடந்தது. இதன் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் செல்வ மீனாட்சி வரவேற்றார். பொருளாளர் சிவசிதம்பரம் துவக்கி வைத்தார். 12 கல்லூரிகள் கலந்து கொண்டன. அரையிறுதி போட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி- சிவகாசி எஸ்.எப்.ஆர், கல்லூரியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் வன்னிய பெருமாள் கல்லூரி- மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரியை வென்றது. இறுதி போட்டியில் விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரி- மதுரை லேடி டோக் கல்லூரியை வென்று முதலிடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களை பிடித்த வன்னிய பெருமாள் கல்லூரி, மதுரை லேடி டோக் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரிகளுக்கு, கல்லூரி செயலாளர் மதன் கோப்பையை வழங்கினார். கல்லூரி இணை செயலாளர் இனிமை, நிர்வாக குழு தலைவர் முரளிதரன் உடனிருந்தனர்.