உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

விருதுநகர் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆக., 5 ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவர்களுடன் ஆக., 5 ல் காலை 10 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளியில் நடக்கும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதியம் 2 மணிக்கும், ஆப்தமாலிக் அசோசியேஷன் 59 வது ஆண்டு கூட்டத்தில் மாலை 4 மணிக்கும் கலந்து கொண்டு பேசுகிறார். கோவில்பட்டி கதிரேசன் மலையில் உள்ள யு.டி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் மாலை 6.30 மணிக்கு கலந்துரையாடல் நடத்துகிறார். இதைதொடர்ந்து விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை