உள்ளூர் செய்திகள்

13 பவுன் நகை பறிப்பு

விருதுநகர்:விருதுநகர் ஆணிமுத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ர் பொன்னுச்சாமி மனைவி ராஜஜெயந்தி,50. இவர் நேற்று மாலை 4 மணிக்கு சோனை கருப்புசாமி தெருவில் நடந்து சென்றார். அப்போது டூவிலரில் பின்னால் வந்த இருவர், கழுத்திலிருந்த 13 பவுன் நகையை பறித்து கொண்டு சென்றனர். அங்கிருந்த முருகன் என்பவர், இதை தடுத்த போது இவரை கத்தியால் குத்தி விட்டு, டூவிலரில் தப்பினர். இரண்டு நாட்களுக்கு முன் சாயல்குடி- பரளச்சி ரோட்டில் தம்பதியரிடம் 10 பவுன் நகையை டூவிலரில் பறித்து சென்ற நிலையில், இச்சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி