| ADDED : செப் 30, 2011 11:05 PM
விருதுநகர் : ''விருதுநகர் விளையாட்டு அரங்கில் , எனது முயற்சியில் ,ரூ. 3 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட உள்ளதாக,'' தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பாண்டியராஜன் கூறினார்.விருதுநகர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளர் சகாயமேரியை ஆதரித்து, பிரசாரம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2004 ம் ஆண்டிலிருந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுடைய தாய்மார்களின் பொருளாதர மற்றும் சமூக மேம்பாட்டிற்காக, அவர்களை ஒருங்கிணைத்து, சென்னை மாவட்டத்தில் மட்டும் 2392 சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 36 ஆயிரம் மகளிர்களுக்கு வங்கிகளின் மூலம் கடனுதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 1023 சுய உதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, 15 ஆயிரம் மகளிர்களின் சமூக பொருளாதர மேம்பாட்டிற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் வசிக்கும் விருதுநகர், சிவகாசி பகுதி மாணவர்களுக்கு, தலா 60 இடங்களில் இலவச சிற்றுண்டியுடன் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு வாழ்வியல் கல்வி, தொழிற்கல்வி கல்வி கற்று கொடுக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 100 மாணவர்களின் கல்லூரி படிப்பிற்கான செலவை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் எனது முயற்சியில் ,மூன்று கோடி ரூபாய் செலவில் உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட உள்ளது, என்றார்.