உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளியில் தண்ணீர்; மாணவர்கள் அவதி

பள்ளியில் தண்ணீர்; மாணவர்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி உள்ளூர் பட்டி நடுநிலைப் பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கடந்த ஒருவாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இப்பள்ளியில் மழை நீர் தேங்கி கடந்த சில நாட்களாக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் தண்ணீரில் இறங்கி நடந்து செல்கின்றனர்.நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த எம்.எல்.ஏ. மான்ராஜ், ஊராட்சி தலைவர் ராஜ்குமார் ஆகியோரிடம் பொது மக்கள் நேரடியாக முறையிட்டனர். ஆனாலும், நேற்று காலை வரை தண்ணீர் முழு அளவில் வெளியேற்றப்படாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி தீர்வு காண வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை