உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரிப்பு

 ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கண்மாய் நிரம்புவதை தடுக்கும் வகையில் தனி நபர்கள் ஷட்டர்களை அப்புறப்படுத்தி தண்ணீரை வெளியேற்றுகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையினால் மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டது. தற்போது பெய்யும் மழையினால் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் கண்மாய் நிரம்பி மறுகால் விழவேண்டிய நிலையில் சில தனிநபர்கள் கண்மாய் நிரம்புவதை தடுக்கும் வகையில் ஷட்டர்களை அப்புறப்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனை பொதுப்பணித்துறையினர் சரி செய்தாலும் மீண்டும் இதே நிலை தொடர்கிறது. இது குறித்து விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றும் தனி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை