மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
2 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
2 hour(s) ago
விருதுநகர்; விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் பாதாளசாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட ரோடு, பேட்ஜ் பணிகள் செய்யாமல் உள்ளதால் ஜல்லிகள் பரவி விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மருத்துவமனைக்கு செல்வதில் மிக முக்கியமான ரோடு. இது நெடுஞ்சாலைக்கு சொந்தம் என்பதால் 2 ஆண்டுகளுக்கு முன்பே புதிய ரோடு போடப்பட்டது. நகராட்சி நிர்வாகம் பாதாளசாக்கடை பணிக்காக தோண்டுவது வாடிக்கையாக உள்ளது.இப்படியாக விருதுநகர் மதுரை ரோடு, கச்சேரி ரோடு, ரயில்வே பீடர் ரோடு ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2 மாதங்கள் முன் ராமமூர்த்தி ரோடு 20 அடி ஆழம் வரை பள்ளம் ஏற்பட்டது. பின் இந்த பள்ளம் மூடப்பட்டது. ஆனால் தற்போது வரை பேட்ஜ் பணிகள் செய்யப்படவில்லை.இந்த சேதத்தால் அந்த ரோடு முழுவதும், மண்ணும், ஜல்லிகளும் பரவி கிடக்கின்றன. மருத்துவமனை செல்லும் ரோடு என்பதால் அதிகளவில் ஆம்புலன்ஸ்கள் வந்து செல்கின்றன. பள்ளமும், மேடுமாக மண் பரவி கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. உடனடியாக பேட்ஜ் பணிகள் செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 hour(s) ago
2 hour(s) ago