உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 20 நாட்களாக தண்ணீர் வரல காலி குடங்களுடன் தவிக்கும் பெண்கள்

20 நாட்களாக தண்ணீர் வரல காலி குடங்களுடன் தவிக்கும் பெண்கள்

காரியாபட்டி : காரியாபட்டி ஜோகில்பட்டி அருந்ததியர் காலனியில் 20 நாட்களாக குடிதண்ணீர் சப்ளை இல்லாததால் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.காரியாபட்டி ஜோகில்பட்டி அருந்ததியர் காலனியில் உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. பற்றாக்குறையாக இருந்ததால் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இவை 2 வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்கின்றனர்.கோடை காலம் துவங்கியதையடுத்து தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த முறை குடிநீர் சப்ளை செய்து 20 நாட்களானது, உள்ளாட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது குழாய் உடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதுவரை சரி செய்த பாடில்லை.குடிநீர் எடுக்க மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று அடிகுழாயில் எடுத்து வருகின்றனர். புழக்கத்திற்கான தண்ணீர் தரை தள தொட்டியில் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. குடி தண்ணீர் சப்ளையும் 20 நாட்களானது, புழக்கத்திற்கான தண்ணீரும் சரிவர கிடைக்காத ஆத்திரத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் குழாய் உடைப்பு சரி செய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ