உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பலி

பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பலி

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி புதுத்தெருவைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி காளிராஜன் 52. இவர் அக்., 30 தீபாவளிக்காக வீட்டிற்கு பட்டாசு வாங்கிக் கொண்டு சென்றார். அப்போது அப்பகுதியில் சிறுவர்கள் வெடித்த பட்டாசின் தீப்பொறி காளிராஜன் கொண்டு வந்த பட்டாசில் பட்டு, வெடித்து தீப்பற்றியது. இதில் காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி