மேலும் செய்திகள்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
21 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (டிச. 2)
21 hour(s) ago
டூவீலரில் அழைத்து செல்லப்படும் கைதிகள்
21 hour(s) ago
போலீஸ் செய்திகள்/ கோயில் ஊழியரை மிரட்டியவர் மீது வழக்கு
22 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அச்சம் தவிர்த்தான் கண்மாய் கரையில் தீப்பெட்டி ஆலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்ததில் விக்னேஷ் 24, பலியானார். 7 பேர் காயமடைந்தனர். வெம்பக்கோட்டை தாலுகா நரிக்குடியில் தீப்பெட்டி நிறுவனத்தில் வேலை பார்க்க நேற்று காலை 8:00 மணிக்கு ராஜபாளையம் வரகுணராமபுரத்தைச் சேர்ந்த டிரைவர் முருகன், ஒரு வேனில் சென்னல் குளத்தை சேர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் சென்றார். காலை 8:40 மணிக்கு ஏ. ராமலிங்கபுரத்திலிருந்து அச்சம் தவிர்த்தான் கண்மாய் கரையில் வேன் செல்லும்போது கட்டுப்பாடு இழந்து கண்மாயில் கவிழ்ந்தது. இதில் மம்சாபுரம் இடையங்குளத்தை சேர்ந்த விக்னேஷ் 24 , சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சென்னல் குளத்தைச் சேர்ந்த சண்முகத்தாய் 55, மாரியம்மாள் 60, வீரலட்சுமி 40, தனமாரி 35, வேலம்மாள் 29, வெங்கடேஷ் 45, பேயன் பட்டியைச் சேர்ந்த வீரகாளி 25 காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார், கிராம மக்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago