மேலும் செய்திகள்
எச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
5 hour(s) ago | 3
கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; சொல்கிறார் ராமதாஸ்
5 hour(s) ago | 5
திருப்பூர்: பனியன் நூல் விலை கிலோவுக்கு 12 ரூபாய் உயர்ந்ததால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.பஞ்சு ஏற்றுமதி அதிகளவில் நடந்ததால், பஞ்சு விலையும், அதை தொடர்ந்து, நூல் விலையும் உயர்ந்தது. கிலோ 135 ரூபாயாக இருந்த காட்டன் ஒசைரி நூல், ஓராண்டு காலத்தில் 270 ரூபாய் வரை உயர்ந்தது; நூல் விலை எதிர்பாராமல் உயர்ந்ததால், பின்னலாடை நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன.இந்நிலையில், சாயத்தொழில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்த பின், உற்பத்தி தானாக குறைந்ததால், நூல் விற்பனை மந்தமானது. நூற்பாலைகளில் உற்பத்தியான நூலிழைகள் தேங்கியதால், விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கிலோவுக்கு 77 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டது.நூல் விற்பனை சூடுபிடிக்காத காரணத்தால், சிறப்பு தள்ளுபடி விலையில், நூலிழைகள் விற்பனை செய்யப்பட்டன. பருத்தி அறுவடை துவங்கியுள்ள நிலையில், பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தாராள அனுமதி வழங்கியதை தொடர்ந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. நூலிழைகளுக்கான வரவேற்பு சற்றும் அதிகரிக்காததால், தள்ளுபடியை ரத்துசெய்துவிட்டு, பழைய விலைக்கு நூல் விற்பனை நடந்தது.
பஞ்சு விலை மேலும் உயர்ந்து வருவதால், நூல் விலை மீண்டும் நேற்று, கிலோவுக்கு 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, காட்டன் ஒசைரி 16ம் நம்பர் நூல்163 ரூபாய்; 20ம் நம்பர் 166 ரூபாய்; 24ம் நம்பர் 174; 30ம் நம்பர் நூல் 186; 34ம் நம்பர் நூல் 193; 40ம் நம்பர் நூல் 200 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக, 190 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்பட்ட நூல் விலை, மீண்டும் 200 ரூபாயாக உயர்ந்துள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
5 hour(s) ago | 3
5 hour(s) ago | 5