உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களை கட்டியது தே.மு.தி.க., தலைமை அலுவலகம்:விண்ணப்பம் பெற ஆர்வம்

களை கட்டியது தே.மு.தி.க., தலைமை அலுவலகம்:விண்ணப்பம் பெற ஆர்வம்

சென்னை:உள்ளாட்சித் தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்காக, கட்சி அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் அதிகளவில் கூடியதால், கட்சி அலுவலகம் களை கட்டியது.உள்ளாட்சித் தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விண்ணப்பங்கள், வரும் 4ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி சிறந்த நாள் என்பதால், அன்றைய தினமே சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை, சென்னை மாவட்டச் செயலர்களிடம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வழங்கினார்.

கட்சியின் சார்பில், சென்னையில் போட்டியிட விரும்புவோருக்காக, நேற்று காலை 11 மணி முதல் வரும் 12ம் தேதி மாலை 5 மணி வரை, கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விண்ணப்பங்களை, சென்னை மாவட்டச் செயலர்கள் செந்தாமரைக்கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ் ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெறுவதற்காக, நேற்று காலை 9 மணி முதலே விண்ணப்பதாரர்கள் ஆர்வமாக வரத் தொடங்கினர். சரியாக காலை 11 மணி முதல் கட்டணம் பெற்றுக் கொண்டு, விருப்ப மனு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

மேயர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்காக, 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து, மதியமும் விண்ணப்பங்களை வாங்கிச் செல்ல, தொண்டர்கள் பலர் ஆர்வமாக வந்தனர்.தற்போது, எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள தே.மு.தி.க., கட்சியின் சார்பில், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பதற்காக, அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிற மாவட்டங்களில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்சி அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை