உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனித்து போட்டி : தி.மு.க.,- காங்., தயக்கம்

தனித்து போட்டி : தி.மு.க.,- காங்., தயக்கம்

கம்பம்:உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக தி.மு.க.,- காங்., அறிவித்துள்ளதால், அக்கட்சியினர் போட்டியிட தயக்கம் காட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முழுவீச்சில் அ.தி.மு.க.,தயாராகி வருகிறது. வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று தி.மு.க., கருதுகிறது.இதனால்தான் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தி.மு.க., வினர் கூறுகின்றனர். தி.மு.க., அறிவிப்பால், காங்., கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டி என்ற அறிவிப்பால்,போட்டியிட விருப்ப மனு கொடுத்த தி.மு.க.,வினர் கூட, தற்போது போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர். தி.மு.க., வெளியேற்றியதால் காங்., நிர்வாகிகள் மத்தியிலும் சோகம் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ