விருத்தாசலம்:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எழுந்த மோதலில், மூன்று பேரை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக் கோரி, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியல் நடந்தது.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரிடையே கருத்து @வறுபாடு இருந்தது. நேற்று முன்தினம் மாலை, இரு கோஷ்டியினரும், ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக் கொண்டனர்.
இரு தரப்பையும் சேர்ந்த தியாகராஜன், கண்ணதாசன், குமார் உட்பட, 13 பேர் மீது, விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முருகன் என்பவரை, சிலர், அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த பாக்கியராஜ், பழனிவேல் ஆகியோரும் காயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.முருகன் உள்ளிட்டவர்களை அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்ய கோரியும், கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், ஒரு தரப்பினர், போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியல் செய்தனர்.அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சீராளன், @பச்”வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். இதனால், விருத்தாசலம் - கடலூர் Œõலையில், காலை, 9 மணி முதல், 9.30 மணி வரை, போக்குவரத்து பாதித்தது.